பிறந்தநாளன்று தன்னை மரக்கன்று நடச் செய்த பி.ஆர்.கே. சினி காலண்டர்’ ராயல் பிரபாகருக்கு ‘ பசுமை நாயகன்’ பட்டம் வழங்கிப் பாராட்டிய இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி!

0
190
இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி.க்கு மரக்கன்று வழங்கி வாழ்த்தும் ராயல் பிரபாகர்

சாருஹாசன் தாதாவாக நடித்து, திருநங்கைகளை பெண்ணாக மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டு, கடந்த வருடம் வெளியான ‘தாதா 87’, விரைவில் ரிலீஸாகவிருக்கிற ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’, ‘பீட்ரூ’, தற்போது உருவாகிக் கொண்டிருக்கிற ‘பவுடர்’ படங்களின் இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி.க்கு 18.10.2020 அன்று பிறந்த நாள். அதையொட்டி, அவரை நேரில் சந்தித்த ‘பி.ஆர்.கே சினி பர்த்டே காலண்டர்’ ராயல் பிரபாகர் மரக்கன்று வழங்கி வாழ்த்தினார்.

தனது மகன், மகளோடு மகிழ்ச்சியாய் மரக்கன்று நடும் இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி

மரக்கன்றை பெற்றுக் கொண்ட இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி அதை தனது இல்லத்தில் நடும்போது, ” ‘தாதா 87’ படம் ரிலீஸானப்போவே ராயல் பிரபாகரையும் அவரோட நற்பணி பத்தியும் என்னோட பி.ஆர்.ஓ. மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். ராயல் பிரபாகரோடது சுயநலமில்லாத தனித்துவமான முயற்சியாத்தான் நான் பார்க்கிறேன். 14 வருஷமா இதை செய்றார்னு கேள்விப்படறப்போ ஆச்சரியமா இருக்கு. எனக்கு அப்போ பிறந்தநாள் வந்துச்சு. போன்ல என்னோட ராசி, நட்சத்திரமெல்லாம் கேட்டுக்கிட்டு கோயில்ல அர்ச்சனை செஞ்சு, அவரோட ஸ்டைல்ல பிறந்தநாள் வாழ்த்து தெரிவிச்சார். நெகிழ்ச்சியா இருந்துச்சு. இதோ அடுத்த பிறந்தநாளும் வந்துடுச்சு.

தொடர்ச்சியா ஷூட்டிங், ரிலீஸுக்கு ரெடியாகிற படங்களோட வேலைகள்னு பிஸியா இருந்த என்னை போன்மேல போன் போட்டு தேடி வந்து மரக்கன்று கொடுத்து நடவும் வெச்சிட்டார். நடுறது பெருசு இல்லை, நடறதை முறையா பராமரிச்சு வளர்க்கணும்னு நானும் உறுதியா இருக்கேன். என் பிள்ளைகளுக்கும் அதை சொல்லியிருக்கேன். இப்போ நட்ட மரக்கன்று அடுத்த பிறந்தநாளுக்கு நல்லா வளர்ந்திருக்கும், வளர்ந்திருக்கணும். அதுதான் ராயல் பிரபாகரோட சேவைக்கு நான் செலுத்துற பதில் மரியாதை!

நல்லதை செய்யணும், அதை நேர்த்தியா செய்யணும்கிறதுல உறுதியா இருக்குறதும், தனி மனுஷனா யாருடைய ஸ்பான்ஸரும் இல்லாம, எதிர்பார்க்காம இதை செய்றதும்தான் ராயல் பிரபாகரோட பலம்” என்றவர், ராயல் பிரபாகருக்கு ‘பசுமை நாயகன்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.

இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கிய ‘PUPG பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் டீஸர் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கிறது. படத்தை OTT-யில் ரிலீஸ் செய்ய அணுகியபோதும், தியேட்டரில் ரிலீஸ் செய்வதை விரும்பி சரியான தருணத்துக்காக காத்திருக்கிறார்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் ‘பீட்ரூ’ படம் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு, ஒருசில காட்சிகள் எடுக்கப்பட்டால் முடிந்துவிடும் என்ற நிலையிலிருக்கிறது. ‘பவுடர்’ படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here