தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடிக்கும் ‘தேவதாஸ்.’

0
269

‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ ஆகிய  படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா நாயகனாக நடிக்கும் படம் ‘தேவதாஸ்’.

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் நடிக்ர் தம்பி ராமையா – ஷாகுல் ஹமீது இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவும்,  கலகலப்பூட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார்கள்.

உமாபதி ராமையா, மனிஷா யாதவ் நடிக்கும் ‘தேவதாஸ்’ திரைப்படம்

மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம்.

இப்படம் பார்க்கும் அனைவருக்கும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும்விதமாக உருவாகி இருக்கிறது இப்படத்தின் திரைக்கதை.

இந்த  உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இரா.மகேஷ்.

ஒளிப்பதிவு – யுகா, இசை – தினேஷ், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – தாமரை, ரோகேஷ், நிகில் முருகன் – மக்கள் தொடர்பு, எழுத்து, இயக்கம் இரா. மகேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here