ஒரே வருடத்தில் மூன்று ஹிந்திப் படங்கள்; தாதாசாகேப் பால்கே விருதுக்குத் தேர்வான ‘ஹிப்பி’ பட நாயகி!

0
249

தெலுங்கில் வெற்றி வெற்றி பெற்ற RX 100 படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிக்க, தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது உருவாகிவரும்  ஹிப்பி  படத்தில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018  ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது கிடைத்துள்ளது.

ஒரே வருடத்தில் மூன்று ஹிந்தி படங்களில் நடித்ததற்காக இந்த விருதினை நேற்று அவர் பெற்றுள்ளார்.

பல ஹிந்திப் படங்களில் நாயகியாக நடித்துவரும் டிகங்கான சூர்யவன்ஷி விரைவில் தமிழிலும் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாதாசாகெப் பால்கே விருது வாழ்நாள் சாதனை  புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here