பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள்! பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்!

0
82

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகள்! பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்!

கொரோனா பரவல் காரணமாக போதிய வருமானமின்றி வாடும் பத்திரிக்கையாளர்களுக்கு, எம்.ஏ.எம் ஐயாவின் தனி செயலாளரும், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் சேர்மேனுமாகிய திரு. ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின்படி, தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் மூலம் அவ்வப்போது தேவையான நிவாரண உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், சென்னை அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு 23.4.2020 அன்று நடைபெற்றது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், முன்னணி மற்றும் சிறு பத்திரிக்கைகளில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஊடவியலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு சுமார் நூறு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால்

பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஜி.நாகராஜன், மாநில துணை தலைவர் ஜானி, மாநில துணை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஜி. நாகராஜன், சக பத்திரிக்கையாளர்கள் சார்பாக பெட்ரிசியன் கல்லூரி நிர்வாகத்திற்கும், அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here