‘கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. அதுபோல தற்போது  மிகவும் சுவாரஸ்யமான டிரெண்டிங் விஷயம் என்னவென்றால், “யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?” என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கூட குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.

Related image

இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன், ஆகஸ்ட் 17-ம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாகும்  கோலமாவு கோகிலாவுக்காக காத்திருக்கிறார்கள்.

Related image

ஒரு ஆர்வத்தில் இயக்குநர் நெல்சனிடமே”யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?” என்று கேட்டோம். இந்த படத்துல பெரியளவுல ஹிட்டாகியிருக்கிற கல்யாண வயசுல பாட்டுலேயே உங்க கேள்விக்கான விடை கிடைச்சிருக்கும். ஆனா, அந்த சஸ்பென்ஸை உடைச்சிட்டா படத்தோட சுவாரஸ்யம் போய்டும்ல. அதுக்காகத்தான், பாடல்ல அதை மட்டும் வெட்டினோம். அப்படி வெட்டலைன்னா உங்களுகுள்ள இப்படியொரு கேள்வி கேட்கிற அந்த ஆர்வம் இருந்திருக்காது. நாளைக்கு படம் ரிலீஸாகுது.  திரையரங்குகளுக்கு வந்து நயன்தாரா யோகிபாபுவின் காதலை  ஏற்றுக் கொண்டாரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

‘கோலமாவு கோகிலா’ படம் எதை பற்றியது என இயக்குநர் நெல்சன் ஓரிரு வார்த்தைகளில் கூறும்போது, “கோலமாவு கோகிலாவில் நீங்கள் குடும்ப உறவுகளை உணரலாம். அதுல பழிவாங்குற மாதிரி சீன் வந்தால் அந்த பழிவாங்கலில் நீங்களும் சேர்ந்து கொள்வீர்கள், விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்களை அனுபவிப்பீர்கள், படம் உங்களை சீட்டின் நுனிக்கும் இழுத்து செல்லும்” என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த ‘கோலாமாவு கோகிலா’ படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். நிர்மல் எடிட்டிங் செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here