ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை-03′

வில்லனாக அறிமுகமாகி கதையின் நாயகனாக வளர்ந்திருக்கும்  நடிகர் ஆர்.கே.சுரேஷ் தற்போது இரு மொழிப் படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’.

ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ், வினோத் கிருஷன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்ஷிதா, இரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபுபக்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஐயப்பன்.என், இசை – சன்னி விஸ்வநாத், கதை – ரிஜேஷ் பாஸ்கர்.

அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பற்றிப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.

abu bakkar & rk suresh-1

இது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது. இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70%  தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன.

ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள்,  அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.

தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற பின்னும் அவளுக்கு என்ன நேர்கிறது? அவள் எவற்றையெல்லாம்  சந்திக்கிறாள் என்பதே மீதிக் கதை.

சின்னத் தடுமாற்றத்தில் விழுந்த அவளது வாழ்க்கையின் திசை மாற்றத்தைச் சொல்வதே இந்த ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படம். இந்தப் படத்தில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோயில், மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

பொள்ளாச்சி சம்பவங்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்நேரத்தில் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கிறது படம்.

“பெண்களைப் பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும்படியும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும்படியும் காதல் என்கிற வலை பெண்களைச் சுற்றிப் பின்னம்படும்விதத்தையும் கூறி அறிவுறுத்தி காட் அலர்ட் தரும்படி இப்படம் இருக்கும்” என்று நம்புகிறார் இயக்குநர் .

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here