ஹாரர் படங்களுக்கு பரவலான வரவேற்பும் வசூலில் மினிமம் கேரண்டியும் இருப்பதால் அறிமுக இயக்குநர்கள் கூட ஹாரர் படம் இயக்குவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்!

அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி. பிரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் சொகுசு ஹோட்டல்கள் நடத்தி வருகிறார்கள்.

தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.

ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விரைவில் சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

 

எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.

பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி.ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

எத்தனையோ ஹீரோயின்கள் பேய்ப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். இப்போதைக்கு அந்த வரிசையில் சாந்தினியும் சேர்ந்திருக்கிறார். வலுவான கதையாக இருக்கிறபட்சத்தில் காஞ்சனா போல் ஐல படமும் ஹிட்டடிக்கலாம்! சாந்தினிக்கும் தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத் தரலாம். பார்ப்போம்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here