‘நிசப்தம் படத்தின் மனதை மயக்கும் ‘நின்னே நின்னே’ பாட்டு!

0
34

 

 

 

மாதவன் – அனுஷ்கா நடித்துள்ள தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் திரைப்படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை அக்டோபர் 2-ம் தேதி வெளியிடவுள்ள அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம், இப்போது அந்த படத்தில் இடம்பெற்ற நின்னே நின்னே என்ற மனதை வருடும் பாடலை வெளியிட்டுள்ளது.

மனதை உருக்கும் இந்தப் பாடலுக்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க, தெலுங்கில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளை பாஸ்கரபட்லா எழுதியுள்ளார். நீயே நீயே என்ற மெலடி பாடலை ஆலப் ராஜு (தமிழ்) மற்றும் மது பாலகிருஷ்ணன் (மலையாளம்) ஆகியோர் பாடியுள்ளனர். பாடலின் தமிழ் பாடல் வரிகளை கருணாகரன் எழுதியுள்ளார், மலையாள பாடல் வரிகளை பி. கே. ஹரி நாராயணன் எழுதியுள்ளார்.
பாடல் குறித்து இசையமைப்பாளர் கோபி சுந்தர் கருத்து தெரிவிக்கையில், “ த்ரில்லர் படத்தில் காதல் பாடல் இருப்பது கதையின் போக்கிற்கு இடைஞ்சலாக இருக்குமோ என நினைக்க வைக்கும், ஆனால் அதேநேரம், நின் நின்னே பாடலுக்கு கதையில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. மனதை வருடும் இந்த  இந்தப் பாடலை ரசிகர்கள் பாராட்டுவார்கள் என நம்புகிறேன் என்றார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here