‘பில்லா’ மார்ச் 12-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்! அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

0
14

அஜித் ஹீரோவாக நடித்த பில்லா படம் 2007-ம் ஆண்டில் வெளியானது. விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடி நயன்தாரா.

மற்றும் பிரபு, ரகுமான், சந்தானம், ஜான் விஜய் ஆகியோர் நடிக்க, முக்கியமான பாத்திரத்தில் நமீதா நடித்திருந்தார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான அந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்க பட்டது.

ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

வித்தியாசமான ஸ்டைலில் அஜீத் நடித்திருந்த அந்த படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் மார்ச் 12-ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிறது என்பதால் பில்லா படத்தை உற்சாகமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here