”கடவுளிடம் கூடுதல் பலன் பெற உங்கள் ராசிக்கேத்த ஊதுபத்தி!” -தயாரித்து வழங்குகிறார் ‘அட்சதை அகர்பத்தி’ நிறுவன உரிமையாளர் எஸ். சரவணன்

0
837

”கடவுளிடம் கூடுதல் பலன் பெற உங்கள் ராசிக்கேத்த ஊதுபத்தி!” -தயாரித்து வழங்குகிறார் ‘அட்சதை அகர்பத்தி’ நிறுவன உரிமையாளர் எஸ். சரவணன். Mobile: 70949 50999

நினைத்தாலே முக்தி தரக்கூடிய அண்ணாமலையார் திருத்தலம் அமைந்துள்ள ஆன்மிக பூமியான திருவண்ணாமலையிலிருந்து தயாராகி விற்பனைக்கு வருகிறது அட்சதை அகர்பத்தி!

இந்த அகர்பத்தியின் தயாரிப்பு தரப்பிலிருந்து ”மற்ற அகர்பத்திகளுக்கும் இதற்கும் ஏணியல்ல லிப்ட் வைத்தாலும் எட்டாது என்கிற அளவுக்கு தனித்துவம் மிகுந்தது” என்கிறார்கள்.

”அட்சதை அகர்பத்தியில் அப்படியென்ன வித்தியாசம்?”
உற்பத்தியாளர் எஸ். சரவணனிடம் கேட்டோம்…

”எங்க நிறுவனத்தோட பெயர் ‘நித்யா டிரேடர்.’ தயாரிப்பின் பெயர் அட்சதை அகர்பத்திகள்.

மத்த அகர்பத்திகளுக்கும் எங்களோட தயாரிப்புக்கும் என்ன வித்தியாசம்னா எங்களுது வேத முறைப்படி குறிப்பா அதர்வண வேதத்துல குறிப்பிட்டிருக்கிற சாராம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்படுது.

அதாவது வேதத்துல சொல்லப்பட்டிருக்கிற வாசனைப் பொருட்கள், மூலப் பொருட்களைத் தேடித் திரட்டி அதை சரிவிகிதத்துல கலந்து மேஷம் தொடங்கி மீன ராசிவரை 12 ராசிகளுக்கும் தனித்தனியா தயாரிக்கிறோம். 12 வித அகர்பத்தியிலும் வாசனைல வித்தியாசம் இருக்கும். காரணம் கலக்குற பொருட்கள் அப்படி!

இந்திய அளவில் பாத்தீங்கன்னா ராசிக்கான அகர்பத்திங்கிற கான்செப்ட்ல நாங்க மட்டும்தான் பண்றோம்.

திருவண்ணாமலைல விஜயகுமார சாமிகளோட ஆசிரமத்துல தயாராகுதுங்கிறது எங்க ஊதுபத்தியோட இன்னொரு சிறப்பு ” என பெருமிதமாக சொல்கிறார்.

”ஊதுபத்தினு சொன்னாலே அது வாசனைக்கானதுதானே? அதைத்தாண்டி இதில் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டோம்.

‘நிச்சயமா விசேஷ பலன் இருக்கு. நாலு பேர் இருக்கிற இடத்துக்குப் போறீங்க. எல்லாருக்குமா சேர்த்து லட்டு வாங்கிட்டுப் போறீங்கனு வையுங்க. ஆளுக்கு ஒண்ணா கொடுத்துட்டு வந்துடுவீங்க. அவங்க அதுக்கு ஓரு தேங்ஸ் சொல்வாங்க. அத்தோட முடிஞ்சுடும்.

ஆனா, அப்படியில்லாம சீனிவாசனுக்கு மைசூர் பா பிடிக்கும், வெங்கட்டுக்கு சோன்பப்டி பிடிக்கும், பிரேமுக்கு அல்வா பிடிக்கும், சொளம்யாவுக்கு ஜாங்கிரி பிடிக்கும்னு தெரிஞ்சு புரிஞ்சு வாங்கிட்டுப் போய் கொடுத்துப் பாருங்க. அவங்க அட, நமக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வந்திருக்கானேனு ஹேப்பியா ஃபீல் பண்ணுவாங்க. அவங்க மனசுல ஆழமாவும் பதிஞ்சு போவீங்க.

பிள்ளையாருக்கு மோதகம் பிடிக்கும், ஐயப்பனுக்கு நெய் பிடிக்கும், அனுமனுக்கு வெண்ணெய் பிடிக்கும், அம்மனுக்கு கூழ் பிடிக்கும்னு பாத்துப் பாத்து படைக்கிறதும் அப்படித்தான்.
எங்களோட அகர்பத்தியும் இதே கான்செப்ட்லதான் தயாராகுது.

ஆமா, நீங்க மேஷ ராசிக்காரர்னா மேஷ ராசிக்கான அகர்பத்தியை வாங்கி உங்க பூஜைல வெச்சு வழிபடுறது மூலமா மேஷ ராசிக்கான அதிபதி உங்க வழிபாடு மூலமா திருப்தியடைவார். இதே பலன்தான் 12 ராசிக்காரர்களுக்கும்!
ஒவ்வொரு ராசிக்கான அதிபதியும் எந்தெந்த வாசனைப் பொருட்களை விரும்புற இயல்புடையவர்கள்னு வேதங்கள், புராணங்கள் மூலமா ஆராய்ச்சி செய்து தயாரிக்கிறதுதான் எங்க தயாரிப்போட ஸ்பெஷாலிடி!” என்றவர்,

இந்த அகர்பத்திகளை இதுக்குத்தான் உபயோகிக்கணும் அதுக்குத்தான் உபயோகிக்கணும்னு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. எல்லாவிதமான சுபகாரியங்களுக்கும் பயன்படுத்தலாம்.

மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு அவங்களுக்குப் பிடிச்சதை செய்றப்போ மனசுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோஷம் வரும்ல. அதே மாதிரி கடவுளுக்குப் பிடிச்சதையே செய்றோம்கிறப்போ அவ்ளோ சந்தோஷமும் மன அமைதியும் கிடைக்கும். அந்த அனுபவத்தை வார்த்தைல சொல்ல முடியாது. அனுபவிச்சுப் பார்த்துதான் உணரணும்; உணருவீங்க” என்றார்.

➡ உங்கள் பூஜையிலும் அட்சதை அகர்பத்திகள் இடம்பெற வேண்டுமெனில் 70949 50999 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

அட்சதை அகர்பத்தி குறித்த இன்னும் சில விவரங்கள்:-

➡ கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் எரியக்கூடியது

➡ விலை அதிகமென கருத வேண்டாம். 20 ஊதுபத்திகள் கொண்ட பாக்கெட் ரூ. 15 மட்டுமே.

➡ அட்சதை அகர்பத்தி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது தயாரிப்பு குறித்து விளக்குவதை யூ டியூபில் பார்க்க:-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here