அரியலூரில் தொடங்கப்பட்டது ‘பசுமை கிராம அமைப்பு’ ; தலைவர் பொறுப்பில் கல்வியாளர் கே.எம். ராஜேஷ்!

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டு முயற்சியால் பசுமை கிராம அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது!

இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்து உள்ளனர் .

இந்த அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கல்வியாளர் கே.எம். ராஜேஷ்!

கல்வியாளர் கே.எம். ராஜேஷ்

இவர் அரியலூரில் ராஜேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி என்கிற கல்விப் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது!

கல்வியாளர் கே.எம். ராஜேஷிடம் அமைப்பின் நோக்கம் குறித்து கேட்டோம்…

”பசுமை கிராமம் என்ற அமைப்பானது,

1.சுகாதாரமான கிராமமாக மாற்றுவது

2.வீடுதோறும் மரக்கன்றுகள் நடுவது மற்றும் அதை பராமரிப்பது

3.நீர் ஆதாரங்களை வீணாக்காமல் தடுப்பது

4.ஏரி, குளம் கரைகளில் மரக்கன்றுகள் நடுவது

5.வேலைவாய்ப்பை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்துதல்

போன்ற பல செயல்திட்டங்களுடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. துவங்கிய முதல் நாளிலேயே அமைப்பினுடைய செயல்பாடுகளின் முன்னோட்டமாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது!’’ என்றார் பெருமிதமாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here