வில்லனாக நடித்து குறுகிய காலத்தில் பெரிய பெயரைச் சம்பாதித்துள்ள ஆர்.கே. சுரேஷ் ,அஜித் ரசிகனாக நடிக்கும் படம் பில்லாபாண்டி!

இந்த படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடலின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிடவிருக்கிறார்!

 

K.C.பிரபாத் தயாரித்து விரைவில் ரிலீஸாகவுள்ள இப்படத்தில் ஆர்.கே. சுரேஷோடு சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் என பலரும் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளரும் நடித்திருக்கிறார் .

இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .

படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்: எடிட்டிங் – ராஜா முகமது , ஒளிப்பதிவு – ஜீவன் , இசை – இளையவன் , எழுத்து – எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் – ராஜ் சேதுபதி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here