சின்னத்திரையின் ‘நாயகி’ இப்போது ‘எக்கோ’ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக…

0
45

 

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாகிறார் நடிகை வித்யா பிரதீப்!

மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப், தற்போது பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமானவர் வித்யா பிரதீப். இவர் சின்னத்திரையில் நாயகி தொடரிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ‘எக்கோ’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

actor srikanth,vidya pradeep,echo film,psychological thrill,director naveen ganesh ,நடிகர் ஸ்ரீகாந்த்,வித்யா பிரதீப்,எக்கோ படம்,சைக்கலாஜிக்கல் திரில்,இயக்குனர் நவீன் கணேஷ்

முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. தற்போது இதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here