‘டிக்டாக்’கிலிருந்து விலகல்… நாட்டின் கண்ணியத்தைக் காட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால் அதிரடி முடிவு!

0
294

நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு டிக்டாக்’கில் 2. 8 லட்சம் பாலோயர்ஸ் உண்டு. அந்தளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தபோதும் இப்போது டிக்டாக்கிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

காரணம் என்ன? இதோ அவரே சொல்கிறார்…

“பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன்.

இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்”  என்று கூறினார்.

நடிகை சாக்‌ஷி அகர்வாலின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here