மறைந்த, தமிழக ராணுவ வீரருக்கு ‘வீர் சக்ரா’ விருது! பிரதமர் மோடிக்கு நடிகர் உதயா நன்றிக் கடிதம்!

0
32

மறைந்த, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் அவில்தார் பழனிக்கு, மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் உயரிய வீர் சக்ரா விருது வழங்கி பெருமை சேர்த்திருக்கிறது!

அதையடுத்து நடிகர் உதயா, பிரதமர் மோடி, ராணுவத் துறை அமைச்சர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனைவர் எல்.முருகன் என மூவருக்கும் நன்றி தெரிவித்து, கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை தனது சார்பாகவும் ‘செக்யூரிட்டி’ படக்குழுவினர் சார்பாகவும்,மறைந்த ராணுவ வீரர் பழனி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, நடிகர் உதயாவும், செக்யூரிட்டி’ படக்குழுவினரும் வீர் சக்ரா விருதினை, ராணுவ வீரர் பழனிக்கு வழங்குமாறு கோரிக்கை கடிதம் எழுதி, அதை 4 .1. 2021 அன்று பிரதமர் மோடிக்கு அனுப்பியதும், அந்த கடிதத்தின் பிரதியை மாநிலத் தலைவர் எல். முருகனிடம் நேரில் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here