சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார்; பலரது குடும்பங்களில் ஒருவராகவே மாறிப்போயிருக்கிறார்.

இந்த கள்ளம்கபடமற்ற அன்புக்கு கைமாறாக, குழந்தைகளை மோசமாக பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஊக்கப்படுத்த மாட்டேன் என பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், தற்போதைய சமூகத்தின் முக்கிய தேவையான ‘குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை’ தடுப்பு விழிப்புணர்வு ஆவணப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

சிசெல் (Chisel) அமைப்பின் நிறுவனர் அரசி அருள் மற்றும் பீஸ் ( Peace) அமைப்பின் நிறுவனர் ராகிணி முரளிதரன் ஆகியோர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியிடம் மேற்சொன்ன ஆவணப்படத்தில் நடிக்கும்படி கோரிக்கை வைத்தார்கள்.

“குழந்தைகளுக்கான விஷயமாச்சே. அவர் நிச்சயம் செய்வார்” என்று உறுதியளித்தார் ஆர்த்தி.

அதன்படியே சிவகார்த்திகேயனும் ஒப்புக் கொண்டார். “ஒரு நடிகன் மற்றும் அப்பாவாக எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த முயற்சியில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.
அந்த ஆவணப்படமானது செப்டம்பர் 27-ம் தேதி சிவகார்த்திகேயனால் வெளியிடப்பட்டது.

அந்த ஆவணப்படம் குழந்தைகள் மீதான தொடுதலில் உள்ள வகைகள், உடல் பாகங்கள், பாதுகாப்பு எல்லைகள், யாரை நம்ப வேண்டும் போன்ற முக்கியமான தலைப்புகளை பற்றி மென்மையான முறையில் பேசுகிறது.
சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

”இந்த வீடியோவை பார்த்த பிறகு ஒரு குழந்தை அவரை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றாலும், நாங்கள் ஒரு குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ததாக, எங்கள் நோக்கம் நிறைவேறியதாக எண்ணிக் கொள்வோம். இந்த விழிப்புணர்வு வீடியோவை திரையரங்குகளில் ஒளிபரப்பவும் முயற்சிகள் நடந்து வருகிறது’’ என்கிறார்கள் ஆவணப்படக் குழுவினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here