மைக்கேல் சசிகுமார்… தமிழ் சினிமாவுக்கு திறமையோடு இன்னொரு ஹீரோ!

0
482

நடிகர் மைக்கேல் சசிகுமார் ( தொடர்புக்கு:- 82207 17473 )

ஸ்மார்ட்டான இளைஞர்.

பிறந்தது, வளர்ந்தது, பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பெல்லாம் பாண்டிச்சேரியில். பிரெஞ்ச் மொழியில் லிட்ரேச்சர் முடித்துள்ளார்.

குத்துச் சண்டையில் ( பாக்ஸிங் ) ஆர்வமுள்ளவர். அதற்கான உடற்கட்டுடன் இருப்பவர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருந்தாலும் பட்டப் படிப்பை முடித்த பிறகு வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர்.

திரைப்படத்தில் ஹீரோவாவதற்கு தேவையான நடனம், சண்டை என பலவும் கற்றுத் தேறியவர்.

உதவி இயக்குநராக, சவுண்ட் இன்ஜினியராக படங்களில் வேலை பார்த்துக் கொண்டே நடிப்பதற்கான வாய்ப்பு தேடியபோது ஏராளமான தோல்விகளையும், வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றியவர்களையும் அதிகம் சந்தித்தவர்.

தோல்விகளைப் பொறுத்துக் கொண்டு, ஏமாற்றங்களைச் சகித்துக் கொண்டு தொடர்ந்து முயற்சித்ததன் பலனாக, ‘புலிக்கொடி தேவன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கிடைத்தது.
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, தனக்கிருக்கும் திறமையை நிரூபித்துள்ளார். அந்த படம் சமீபத்தில் வெளியானது.

அந்த படத்துக்கு தென் மாவட்டங்களில் ஓரளவு வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்பவர், அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான தேடலில் இருக்கிறார்.

சசிகுமாருக்கு சன் டி.வி.யின் பிரபல சீரியல் ஒன்றில் சில எபிசோடுகளில் வில்லனாக நடித்த அனுபவமும் இருக்கிறது.

சசிகுமாரின் அப்பா பன்னீர்செல்வம், பாண்டிச்சேரி சட்டப் பேரவையில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிகிறார்.

அம்மா சரோஜா. கணவர்,பிள்ளைகள் என குடும்பப் பொறுப்பைக் கவனித்துக் கொள்பவதோடு பாண்டிச்சேரியின் பிரபல கல்லூரியொன்றில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்.

நான் நடிகனாகணும்னு முயற்சி பண்ணது ஆர்வக் கோளாறுல எல்லாம் இல்லை. நடிப்புக்கும் எனக்கும் ரத்த பந்தமே உண்டு. ஆமா, என்னோட அப்பா நான் பிறக்கறதுக்கு முந்தி நாடகக் கலைஞரா மேடைகள்ல திறமை காட்டியிருக்கார். அப்பாவுக்கு நடிகர் ஜெய்சங்கர் நல்ல பழக்கம்; நெருக்கம். ஆனா, அப்பா அரசுப் பணிக்குப் போனபிறகு நாடகம், நடிப்புன்னு கவனம் செலுத்த முடியலை.
நான் சினிமாவுல நடிக்க ஆசைப்படறேன்னு தெரிஞ்சதும் அப்பாவும் அம்மாவும் ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க. பொதுவா என் வயசுல இருக்கிற பசங்களுக்கு ஃபிரெண்ட்ஸ்தான் எல்லா விதத்திலும் சப்போர்ட் பண்ணுவாங்க. ஆனா, எனக்கு ஃபிரெண்ட்ஸ் கம்மி. அப்பாவும் அம்மாவும்தான் எனக்கு ஃபிரெண்ட்ஸ் என சிலாகிக்கிறார்.

தான் ஹீரோவாக நடித்து ஒரு படம் ரிலீஸாகியிருந்தாலும், ‘அடுத்தடுத்து ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்ற பிடிவாதமெல்லாம் இல்லை சசிகுமாரிடம்.

வாய்ப்பு கிடைக்கணும். அது என்ன மாதிரியான கேரக்டர்னாலும் அதுல திறமையை வெளிப்படுத்தணும்; பெயர் வாங்கணும். அவ்ளோதான்” என்கிறார்.

தொடர்புக்கு:- 82207 17473

நடிகர் மைக்கேல் சசிகுமார் – பத்திரிகையாளர் சு. கணேஷ்குமார்

சந்திப்பு:- சு. கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here