பாடல் எழுதியும், பாடியும் தனது அசாத்திய திறமையால் மக்களை கவரும் பாடகியின் கதை.தொடர்புடைய படம்1937 இல் வெளியான ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’ படத்தின் ரீமேக்.

ஓரளவிற்கு ரியாலிட்டு ஷோ செய்து புகழ் வெளிச்சம் கொண்ட பாடகர் பிராட்லி கூப்பர், வெயிட்டராக வேலைபார்க்கும் லேடி காகாவை ஒரு கிளப்பில் சந்திக்கிறார்.

அழகும்,திறமையும் கொட்டி கிடக்கும் அவளிடம் இருக்கும் குரல் வளத்தை கண்டு ஆச்சர்யப்படுவதுடன் மட்டுமல்லாது அவரை காதலிக்கவும் ஆரம்பிக்கிறார் கூப்பர்.

தக்க சமயம் வரும்போது தனது மேடையில் லேடி காகாவை  பாட வைத்து அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.தொடர்புடைய படம்கூப்பருக்கு சிறு வயதில் பழக்கப்பட்ட குடியும், போதையும் அவரின் திறமைகளை உறிஞ்சி  எடுக்கிறது.இந்த போதை வெள்ளத்தில் சிக்காத லேடி காகாவுக்கு ரெக்கார்ட் புரடியூசர் ரெஸ் மூலம் லைவ் ஷோ செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த ரியாலிட்டி ஷோவில் காகாவுக்கு உறுதுணையாக இருக்கும் கூப்பர் அவரின் வாழ்க்கை துணையாகவும் ஆகிறார்.

ஒருபக்கம் நட்சத்திரமாக பிறப்பெடுக்கும் லேடி காகா, மறுபக்கம் போதைப் பழகக்த்தால் நட்சத்திர அந்தஸ்தை இழந்து வாடும் கூப்பர் , மாறுபட்ட வாழ்க்கை முறையில் சிக்கிய இருவரின் மன ஓட்டம் தான் படத்தின் திரைக்கதை.a star is born க்கான பட முடிவுதிரைக்கதையின் கனம் உணர்ந்து பாடகராக நடித்தும் படத்தினை இயக்கியும் தனது அங்கீகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறார் பிராட்லி கூப்பர்.

உலகம் முழுவதும் லேடி காகாவின் பாடலுக்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்து அவரை படத்தில் நடிகையாக நன்றாகவே செதுக்கியிருக்கிறார் கூப்பர்.

யூடியூப்பில் ஹிட்டடிக்கும் பாடல்களை விட படத்தில் என்ன பிரமாதப்படுத்திவிட முடியும் என லேடி காகா ரசிகர்கள் கேட்கலாம்.

தொடர்புடைய படம்

ஆனால் பாடகர்களின் ஒவ்வொரு ஹிட்டுக்கும் பின்னாடி இருக்கும் பலமான வாழ்க்கை சூழல்களை உருவகப்படுத்தி அந்த உருவகத்தை தன் பாடல்களால் பிரமாதப்படுத்தியிருக்கிறார் லேடி காகா.

அயர்ன் மேன் புகழ் மேத்திவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லைவ் ஷோவின்  நாம் அதிகம் பார்த்திராத ஸ்டேஜ் பின்புறத்தில் கேமாரை நுழைத்து காட்சிகளை கதைக்களப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் லிரிக்கல் எழுதியும் ஸ்கோர் குவித்திருக்கிறார் லேடி காகா.

ஹிந்தியில் ஹிட்டடித்த ஆஷிக் 2 படம் 1937 இல் வெளியான எ ஸ்டார் இஸ் பார்ன் ஆங்கிலப்  படத்தின் தழுவல் தான்.

தொடர்புடைய படம்

இதுவரை மூன்று முறை தழுவல் செய்யப்பட்டுள்ளது. இது நான்காவது முறை தழுவல்.

இத்தனையும் உணர்ந்து ரசிகர்களுக்கு பழகிப் புளிக்கவிடாமல் மேக்கிங்கில் புதுமை செய்து படத்தை இனிக்கச் செய்திருக்கிறார் பிராட்லி கூப்பர்.தொடர்புடைய படம்புரியாத ஆங்கிலப் பாடல்களில் ரிதத்தில் மயங்கி தவிக்கும் தமிழ் ரசிகர்கள் பார்த்து ரசிக்க கூடிய படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here