சமீபத்தில் வெளியான கோலி சோடா 2 படத்தின் பொண்டாட்டி பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்து அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு தூண்டியிருக்கிறது.

இதனால் ஏகத்துக்கும் குஷியாக இருக்கிற படத்தின் இயக்குநர் விஜய் மில்டன், ‘’ஜாலியான, துள்ளலான ரசிக்ககூடிய பாடலாக உருவாக்குவது தான் எங்கள் ஐடியா. எங்கள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறி இருக்கிறது..

இசை அமைப்பாளர் அச்சு பாடலின் தேவையை எளிதாக உணர்ந்து கொண்டு, இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறந்த பாடலை வழங்ககூடியவர். மணி அமுதவன் எளிதான, அனைவரையும் சென்றடையக்கூடிய பாடல் வரிகளை வழக்கம் போலவே வழங்கியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் லிரிக் வீடியோ எனப்படும் பாடல் வரிகளை கொண்டு வெளியாகும் வீடியோக்களே படத்தை கொண்டு சேர்க்க பயன்படும் ஒரு கருவியாக பயன்படுகின்றன. பாடலை அலங்கரித்து எல்லா வகையிலும் கொண்டு சேர்த்த திங்க் மியூசிக் நிறுவனத்துக்கு நன்றி என்கிறார்.

சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, க்ரிஷா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டன் சிவா உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருகிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரஃப் நோட் ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பில் பரத் சீனி தயாரித்திருக்கிறார். விஜய் ஆண்டனி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here